என்னுடைய கட்சியில் லோகேஷிற்கு …. இந்த பதவிதான் கொடுப்பேன் … மனம் திறந்து சொன்ன விஜய்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னுடைய கட்சியில் லோகேஷிற்கு …. இந்த பதவிதான் கொடுப்பேன் … மனம் திறந்து சொன்ன விஜய்…!

Published

on

நடிகர் விஜயின் மனதில் இடம் பிடித்த இயக்குனர்களின் பட்டியலில் ஒருவராக இடம் பிடித்து இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மேலும்  லோகேஷ் கனகராஜின் அந்தஸ்து வேகமாக உயர்வதற்கு காரணம் விஜய் நடித்த மாஸ்டர் படம் தான் காரணம். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தான் இவருக்கு விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் விக்ரம், லியோ என்று அடுத்தடுத்து இரண்டு மாஸ் திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் தற்பொழுது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார்.

மேலும் அடுத்தடுத்து 5 வெற்றி படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கான முதற்கட்ட வேலைகள் விரைவில் தொடங்க உள்ளதால் லோகேஷ் அதற்கான ஸ்கிரிப்ட்  தயாரிக்கும் பணிகளை ஆறு மாதத்திற்குள் விரைவாக முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தலைவர் 171 படத்தின் சூட்டிங் ஆரம்பிக்க உள்ளார்.

Advertisement

இவ்வாறு இருக்கையில், கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லியோ படத்தின் வெற்றி விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் பிரமோஷன் எதுவும் நடைபெறாத நிலையில் விழாவானது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் 6000-த்திற்கும் மேற்பட்ட ரசிகர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் இடையே லோகேஷ் கனகராஜை குறித்து விஜய் கூறியதாவது,’ லோகேஷ் கனகராஜன் நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன், மாநகரம் படத்தின் மூலம் நம்மளை திரும்பி பார்க்க வைத்த லோகேஷ் கனகராஜ், கைதி மற்றும் விக்ரம் போன்ற படத்தை இயக்கி இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தார்.  இப்பொழுது லியோ படத்தை இயக்கி உலகத்தையே திரும்ப பார்க்க வைத்துள்ளார் என்று நினைக்கிறேன். மேலும் உன்னை நினைக்கையில் மிகவும் பெருமையாக உள்ளது’ என்று கூறினார்.

Advertisement

இதனிடையே அங்கிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய்யிடம், ‘லோகேஷ் கனகராஜ் 10 படங்களை இயக்கிய பின்னர் இயக்குவதை கைவிட்டு விட்டு உங்கள் கட்சியில் சேர விரும்பினால் நீங்கள் உங்கள் கட்சியில் எந்த பதவியினை அவருக்கு அளிப்பீர்கள்?’ என்று கேட்டார்.  இதற்கு பதிலளித்த விஜய், ‘அவருக்கு நான் போதை பொருள் தடுப்பு பிரிவினை வழங்க உள்ளேன் ‘என்று கூற அரங்கமே சிரிப்பலையால் மூழ்கியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in