சமந்தா பற்றி நாக சைதன்யா மனதில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?… அவரே வெளிப்படையாக பகிர்ந்த தகவல்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சமந்தா பற்றி நாக சைதன்யா மனதில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?… அவரே வெளிப்படையாக பகிர்ந்த தகவல்..!!

Published

on

தெலுங்கு திரை உலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜோஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் நாக சைதன்யா. தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நாகசெய்தன்யாவின் ஜோடியாக நடித்த திரை உலகில் களம் இறங்கியவர் தான் பிரபல நடிகையான சமந்தா. அந்த திரைப்படத்தின் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் சுமார் 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த சமந்தா மற்றும் நாகச் சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு இருவருமே சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாகச் சைதன்யா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் உங்களைக் கவர்ந்த ஒரு இந்திய இணைய நிகழ்ச்சியை கூறுங்கள் என்று கேள்வி எழுப்பினர்.

Advertisement

அப்போது தனது முன்னாள் மனைவி சமந்தா நடித்த தி ஃபேமிலி மேன் தொடர் தனது மனதை உலுக்கியது என்று பதில் அளித்தார். அதில் சமந்தாவின் கதாபாத்திரம் நன்றாக இருந்ததாகவும் தன்னுடைய நடிப்பை அவர் அதில் அற்புதமாக வெளிப்படுத்தியதாகவும் பதில் அளித்தார். இந்தத் தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி மற்றும் ஸ்ரேயா தன்வந்தரி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.

இதற்கு முன்னதாக தெலுங்கு யூடுப் சேனல் ஒன்றுக்கு நாக சைதன்யா அளித்த பேட்டியில், சமந்தாவுடன் விவாகரத்து குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். அதாவது தன்னுடைய திருமணத்தில் நடந்த நிகழ்வுகள் துரதிஷ்டவசமானது என்று ஒப்புக்கொண்டார். சவால்கள் இருந்த போதும் அவர் தன்னுடைய முன்னாள் மனைவியுடன் செலவழித்த நேரத்திற்கு மிகுந்த மரியாதையை வெளிப்படுத்தினார். இவரின் இந்த குணம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Advertisement