GALLERY
அம்மன் படத்தில் கண்களை உருட்டி ரசிகர்களை மிரளவைத்த.. குழந்தை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. வெளியான புகைப்படம்..!!

சினிமாவை பொறுத்தவரையில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமானாலும் ஒரு சில குழந்தை நட்சத்திரங்களை மட்டும் என்றும் நம்மால் மறக்க முடியாது. அதன்படி 90 காலகட்டத்தில் சாமி படங்களுக்கு முன்னோடியாக இருந்த அம்மன் திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சுனைனா பதாம்.
தமிழ் மற்றும் தெலுங்கு என பழமொழிகளில் வெளியான அம்மன் திரைப்படத்தை கோடி ராமகிருஷ்ணா இயக்கிய நிலையில் சௌந்தர்யா, வடிவுக்கரசி, சுரேஷ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் பவானி கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியை யாராலும் மறக்க முடியாது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் பிரேஸ்ரெடர் வுமன் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். அம்மன் திரைப்படத்தை தொடர்ந்து இவர் குறுகிய வருடத்தில் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக சுமார் 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு வெளியான பால இராமாயணம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
அந்தப் படத்திற்கு பிறகு இவர் வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. அதன் பிறகு பல வருடங்கள் கழித்து 2019 ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான ஓ பேபி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவருக்கு தற்போது திருமணம் ஆகி ஒரு மகன் உள்ள நிலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர் இன்ஸ்ட்டாவில் யூடியூப் சீரிஸ்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.