LATEST NEWS
எவ்வளவுதான் உயர பறந்தாலும் என … ரஜினியை மறைமுகமாக தாக்கிய …பிரபல இயக்குனர்…!

தமிழ் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. இப்படம் கடந்த 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது. மேலும் வெளியான முதல் நாளிலிருந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை போல் பல்வேறு வசூல் சாதனைகளை செய்துள்ளது. இப்படம் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் வசூல் சாதனையை வெளிநாட்டில் முறியடித்துள்ளது. இதைப்போல் 12 நாட்களில் அதிகமாக வசூல் செய்த ஜெயிலர் படத்தின் சாதனையையும் ரூ .540 கோடி வசூல் செய்து தோற்கடித்துள்ளது.
இந்த சூழலில் படத்தின் பூஜை போட்டபின் எந்தவித நிகழ்ச்சியும் நிகழ்த்தப்படவில்லை. படத்திற்கான ப்ரோமோஷன் மற்றும் இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சி ஏதும் நடைபெறாத நிலையில் நேற்று படத்திற்கான வெற்றி விழா நேரு உள் விளையாட்டு நடந்தது. இந்த நிழச்சியில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மடோனா, மேத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ், ஜனனி என லியோ படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட இயக்குனர் ரத்னா குமார் லியோ படத்தில் தனது பங்களிப்பை பற்றி கூறினார். எவ்வளவுதான் உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் என்று கூறியிருந்தார். இவர் இதனை கூறி மறைமுகமாக ரஜினிகாந்தை தான் தாக்கியுள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஏனெனில் ஜெயிலர் படத்தின் விழாவின் இடையே ரஜினி காக்கா-கழுகு பறந்தேன் பற்றி கூறியிருந்தார். இது அப்பொழுது மிகவும் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. இந்நிலையில் ரத்னகுமார் இவ்வாறு கூறியது தற்பொழுது வைரலாகி வருகிறது.