LATEST NEWS
நிறைமாத கர்ப்பிணியான …மலையாள சீரியல் நடிகை மரணம்…. கர்ப்பிணிகளே உஷாரா இருங்க …!

கேரளாவில் பிரபல தொலைக்காட்சி நடிகை டாக்டர் திவ்யா, 8 மாத கர்ப்பிணி ஆவார். தற்பொழுது இவர் மாரடைப்பு நோயால் இறந்துள்ளார். இருந்தாலும் இவரது குழந்தை பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இருப்பினும் நடிகை திவ்யாவின் மரணமானது கற்பிணி பெண்களின் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. முன்பு உள்ள காலங்களில் பெண்களின் ஹார்மோன்கள் இதயத்திற்கு நன்மை பயப்பதாக இருந்தன. ஆனால் இப்பொழுது உள்ள இளம் பெண்கள் சில அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள்.
இந்நிலையில் டாக்டர் பிரியா திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இதில் அவரது இதயம் செயலிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, கர்ப்பிணிப் பெண்கள் உட்பட அனைத்து இளம் பெண்களும் ஆண்களைப் போலவே அடிப்படை இதய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து, மும்பையில் உள்ள நானாவதி மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருதயநோய் நிபுணர் டாக்டர் ராஜீவ் பகவத் கூறுகையில், “அனைத்து மகளிர் மருத்துவ நிபுணர்களும் இதனை வலியுறுத்துகிறார்கள். ஒரு சாதாரண சூழலில் தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் நிலை உள்ளதா? அதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இது பற்றி மற்றொரு மருத்துவர், “பொதுவாக 36 ஆயிரம் பெண்களில் ஒருவருக்கு இது நடக்கும். மேலும், இதயத்தில் நான்கு வால்வுகள் உள்ளன. இவை இரத்தத்தை சரியான திசையில் அனுப்புகின்றன. இதயம் அல்லது அதன் வால்வுகளில் ஏற்படும் காயங்கள் அல்லது குறைபாடுகள் கர்ப்ப காலத்தில் அபாயத்தை அதிகரிக்கும்” என்றும் கூறியுள்ளார்.