இறந்து விட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா…? தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட…பிரபல மலையாள சீரியல் நடிகை…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இறந்து விட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா…? தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட…பிரபல மலையாள சீரியல் நடிகை…!

Published

on

மலையாளத்தில் ‘ஸ்திரீ’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரெஞ்சுஷா மேனன்.  பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் ‘சிட்டி ஆஃப் காட்’, ‘மரிகுண்டாரு குஞ்சாடு’, ‘பாம்பே மார்ச்’, ‘கார்யஸ்தான்’, ‘ஒன் வே டிக்கெட்’, ‘அத்புத த்வீபு’ உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் பல சீரியல்களில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் இவர் தனது மீடியா வாழ்க்கையை முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, திருமதி மேனன் ஒரு சிறந்த பரதநாட்டிய நடனக் கலைஞரும் ஆவார். இவரின் சொந்த ஊர் கொச்சி ஆகும் .இவரது தந்தை பெயர் சி.ஜி ரவீந்திரநாத் மற்றும் தாயார் உமாதேவி ஆகும். நடிகை ரெஞ்சுஷா மேனன், திருவனந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  தனது கணவருடன் வசித்துவந்தார்.

Advertisement

இதனையடுத்து 35 வயதான நடிகை ரெஞ்சுஷா மேனன் நேற்று தனது  வீட்டில் தூக்கிலிட்டு இறந்து கிடந்துள்ளார். இந்த அசம்பாவிதத்துக்கு ரெஞ்சுஷாவிற்கு ஏற்பட்ட பணநெருக்கடி தான் காரணம் என்று கருத்துகள் பரவி வருகின்றன. மேலும் இது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தற்கொலையாக கருதப்பட்டாலும், இவரின் மரணம் பற்றி மேற்கொண்டு விசாரணையை உயர் அதிகாரிகள் துப்பு துலக்கி வருகின்றனர்.

ரெஞ்ஜுஷா மேனன் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணைகள் கூறினாலும், அவரது மரணம் குறித்து அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மலையாள சீரியல் ரசிகர்கள் மத்தியில்  இவரது இழப்பு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

இதனால் இவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் கேரளாவில் இது போன்ற நிகழ்வு கடந்த மாதமும் நடந்துள்ளது. கடந்த மாதமும்  சீரியலில் நடித்துள்ள மற்றுமொரு நடிகையான 33 வயதான நடிகை அபர்ணாவும், ரெஞ்சுவை போன்று அவரது வீட்டில் கயிறில் தொங்கி  தற்கொலை செய்துகொண்டார். எந்த ஒரு பிரச்சனைக்கும் மரணம் என்பது ஒரு முடிவல்ல என்பதனை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Advertisement