பாக்கியராஜ் பட நடிகைக்கு… இந்த வயதில் இரண்டாவது திருமணமா …? லீக்கான top secret …! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பாக்கியராஜ் பட நடிகைக்கு… இந்த வயதில் இரண்டாவது திருமணமா …? லீக்கான top secret …!

Published

on

தமிழில் 1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கிய வீட்ல விஷேசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரகதி. தனது முதல் படத்திலேயே அசத்தலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த பிரகதி, தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். தமிழ் படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த பிரகதிக்கு தெலுங்கில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது. டோலிவுட்டில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிரகதி  20 வயதில் ஐடி நிறுவன ஊழியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். மேலும் இவர் குடும்ப வாழ்க்கையில் நுழைந்தாலும் சினிமா வாழ்க்கையை விடாமல் திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் பிரகதிக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து பிரகதி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

Advertisement

தமிழ் சினிமாவில் அம்மா வேடங்களில் நடித்திருக்கும் இவர், தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார். இதில் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் அரண்மனைக்கிளியில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. மேலும் பிரகதி இன்ஸ்டாகிராமிலும் மிகவும் ஆக்ட்டிவாக உள்ளார். இதில் அவர் அவ்வப்பொழுது தனது தொடர்ந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றி வருவார். இந்த பதிவுகளில் பிரகதி லேட்டஸ்ட் பாடலுக்கு  நடனமாடும் வீடியோக்களும் டிரெண்டாகி வருகின்றன.

தற்போது  47 வயது ஆகும் நடிகை பிரகதிக்கு தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் 2வது திருமணம் செய்யப் போவதாகவும் தெலுங்கு ஊடகங்களில் தீயாக பரவியது. இதனால் கடுப்பான நடிகை பிரகதி, இது உண்மையல்ல என்று கூறியது மட்டுமல்லாமல் இவ்வாறு உண்மையற்ற செய்திகளை வெளியிட்டதற்காக தெலுங்கு ஊடகங்களை வெளுத்து வாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவினை பதிவிட்டுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement