பிங்க் dress babydoll-க்கு … முழங்காலிட்டு propose செய்த நண்பர்…இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் நடிகை…! - cinefeeds
Connect with us

TRENDING

பிங்க் dress babydoll-க்கு … முழங்காலிட்டு propose செய்த நண்பர்…இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் நடிகை…!

Published

on

தமிழில் மைனா படத்தில் விதார்த்திற்கு ஜோடியாக அறிமுகமான நடிகை அமலா பால் கடந்த 2014ம் ஆண்டு  இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன்பின்  இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 வருடங்கள் கழித்து விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய் மறுமணம் செய்து கொண்டார்.

ஆனால், அமலா பாலோ சிங்கிளாகவே இருந்தார்.மேலும் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும் ஆன்மீக பாதையில் செல்வதாகவும் சமூக வலைதளங்களில் கூறி வந்தார். இந்நிலையில் திடீரென பவ்நிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டவாறு உள்ள புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். பின்பு சில மாதங்களிலேயே அது ஒரு விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் , இதனை வைத்து  அந்த நபர் மிரட்டல் விடுத்து மோசடி செய்கிறார் என வழக்கு தொடர்ந்தார்.

Advertisement

இதற்கிடையில், அமலா பாலின் பிறந்தநாளில் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டார். அதில் ஜெகத் தேசாய் ஒரு உணவகத்தில் நடனமாடினார். பின்பு அமலா பாலுக்கு மோதிரத்தை அணுவித்து propose செய்ய, அமலா பாலும் தனது முத்தத்தால் இதற்கு சம்மதம் தெரிவித்தார் . அமலா பால் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில்  #WeddingBells என்று குறிப்பிட்டு  பதிவேற்றியுள்ளார்.

அதே போல் அமலா பாலின் காதலர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “என் ஜிப்சி குயின் ஓகே சொல்லிவிட்டாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே” என்று பதிவிட்டுள்ளார். எனவே, அமலா பாலின் திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Jagat Desai (@j_desaii)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement