நான் கூட விஜய்னு நினைச்சிட்டே… அட நம்ம பார்த்திபன் SIR-ஆ இது… ட்ரெண்டிங்கில் AI புகைப்படம்…! - cinefeeds
Connect with us

TRENDING

நான் கூட விஜய்னு நினைச்சிட்டே… அட நம்ம பார்த்திபன் SIR-ஆ இது… ட்ரெண்டிங்கில் AI புகைப்படம்…!

Published

on

தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி அனைத்து இடங்களிலும் அமோகமான வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இதற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். மேலும் லியோ பாக்ஸ் ஆபிஸில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து உலகளவில் சாதனை படைத்துள்ளது.

லியோவில் விஜய்யின் பெயர் பார்த்திபன் ஆகும். இந்நிலையில் அவரது நெருங்கியவர்களால் பார்தி என்று அழைக்கப்படும் விஜய், ஒரு கட்டத்தில் லியோ தாஸ் என்று தவறாக நினைக்கும் போது பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறார். இதனால் தனது வாழ்க்கை பாதையில் ஏற்படும் தடைகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

Advertisement

படம் வெளியானதில் இருந்தே, ரசிகர்கள் சமூக ஊடகங்களில் நடிகர்-திரைப்படத் தயாரிப்பாளரான ஆர். பார்த்திபனுடன் இருக்கும் விஜய்யின் பல்வேறு மீம்கள் மற்றும் எடிட் செய்யப்பட்ட படங்களை பதிவிட்டு வருகின்றனர்.இதனையடுத்து லியோவின் ரசிகர் ஒருவர் வெளியிட்ட AI புகைப்படத்தை விஜய்யின் முகத்தில் வைத்து எடிட் செய்த பார்த்திபன் வியப்பு அடைந்து அதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Advertisement

இதில் பார்த்திபன்,  “மிஸ்டர் விஜய் ரசிகர்கள் மன்னிக்க! இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு!” என்று தமிழில் குறிப்பிட்டு இருந்தார். பார்த்திபனின் இச்செயலில்  உள்ள நகைச்சுவையை விஜய்யின் ரசிகர்களும் கவனித்து தங்கள் பாராட்டுக்களைப் தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் AI புகைப்படத்தினை போஸ்ட் செய்துள்ளார். அதில் லியோ போஸ்டரில் PARTHIPAN AS PARTHIPAN (PARTHI ) என்று குறிப்பிடப்பட்டு இருந்தது என்பது கவனிக்கத் தகுந்த  விஷயமாகும்.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement