TRENDING
இதோ ரெடி ஆகிட்டாங்க அடுத்த மணமகள்…இணையத்தில் வைரலாகும்… அர்ஜுன் மகளின் திருமண நிச்சயதார்த்த வீடியோ…
ACTION KING அர்ஜுன்-நிவேதிதா தம்பதியருக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்தமகளான ஐஸ்வர்யா விஷாலின் ‘பட்டத்து யானை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்து தமிழ் மற்றும் கன்னட படமான ‘சொல்லிவிடவா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது தனது தந்தை அர்ஜுன் இயக்கும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் ‘அடங்கன்வாளா மகாஜனங்களே’ படத்தின் மூலம் அறிமுகமான உமாபதி, ‘மணியார் கோடுலமன்’, ‘திருமணம்’, ‘தண்ணி வண்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் உமாபதியும் ஐஸ்வர்யா அர்ஜுனும் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் நேற்று காலை உமாபதிக்கும், ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் சூழ கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்றது. தற்பொழுது இவர்களின் நிச்சயதார்த்த வீடியோ வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது#Kollywood | #TamilCinema | #Arjun pic.twitter.com/ZMgzbIeQwe
— The karigai (@thekarigai) October 27, 2023