கீர்த்தி பாண்டியனை அடுத்து… மணமகளாகும் பிரபல நடிகரின் மகள்… ரகசியமாக நடைபெற்ற நிச்சயதார்த்தம்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கீர்த்தி பாண்டியனை அடுத்து… மணமகளாகும் பிரபல நடிகரின் மகள்… ரகசியமாக நடைபெற்ற நிச்சயதார்த்தம்…!

Published

on

ACTION KING அர்ஜுன்-நிவேதிதா தம்பதியருக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள் உள்ளனர். இதில் விஷாலின் ‘பட்டத்து யானை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா. அடுத்து தமிழ் மற்றும் கன்னட படமான ‘சொல்லிவிடவா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது தனது தந்தை அர்ஜுன் இயக்கும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தம்பி ராமையாவின் மகன்  ‘அடங்கன்வாளா மகாஜனங்களே’ படத்தின் மூலம் அறிமுகமான உமாபதி, ‘மணியார் கோடுலமன்’, ‘திருமணம்’, ‘தண்ணி வண்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது சமுத்திரக்கனி நடித்த ‘ராஜக்கிளி’ படத்தை இயக்கியிருக்கிறார் தம்பிராமையா. மேலும் உமாபதியும் ஐஸ்வர்யா அர்ஜுனும் காதலிப்பதாக தகவல்கள் பரவிவந்தது.

Advertisement

இதுகுறித்து நடிகர் தம்பி ராமையா கூறியதாவது, உமாபதி திருமணத்திற்கு  பெண் பார்க்க ஆரம்பித்த போது ஐஸ்வர்யாவை காதலிப்பதாக அவர் கூறியுள்ளார். நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டோம். மேலும்  ஐஸ்வர்யா அர்ஜுன் வீட்டிலும் முழு சம்மதம் இருப்பது தெரிவித்தனர். எனவே ஜூன் கடந்த 19ம் தேதி முறைப்படி அர்ஜுன் வீட்டிற்கு சென்றோம்.

அப்பொழுது ஐஸ்வர்யா நடிக்க  தெலுங்கு படத்தை அர்ஜுன் இயக்குகிறார். இதனால் அதன் பிறகு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம்.என்று கூறினார்.இவ்வாறு இருக்கையில் இன்று காலை உமாபதிக்கும், ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த  நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் சூழ கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் ஆஞ்சநேயர் கோவிலில்  நடைபெற்றது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement