சித்தி – மருமகன் காதல்…அறைக்குள் நுழைந்த தந்தை கண்ட அதிர்ச்சி காட்சி…கோவிலுக்குக் கூட்டிட்டு போய் கிராமத்தினர் செஞ்ச காரியம்… பீகாரில் வைரலாகும் அந்த ‘கட்டாய’ வீடியோ…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சித்தி – மருமகன் காதல்…அறைக்குள் நுழைந்த தந்தை கண்ட அதிர்ச்சி காட்சி…கோவிலுக்குக் கூட்டிட்டு போய் கிராமத்தினர் செஞ்ச காரியம்… பீகாரில் வைரலாகும் அந்த ‘கட்டாய’ வீடியோ…!

Published

on

பீகார் மாநிலம், ரோஹிவா கிராமத்தைச் சேர்ந்த ஜாக்லல் மஹாதோவ் என்பவரது இளைய மகள் மம்தா குமாரி. இவருக்கு நான்கு மூத்த சகோதரிகள் உள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் திருமணமாகித் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் மம்தாவின் மூத்த சகோதரியின் மகனான கோலு என்ற வாலிபர், சிறுவயதிலிருந்தே தனது தாத்தா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அவ்வாறு வந்து சென்ற நாட்களில், மம்தா குமாரிக்கும் அவரது அக்கா மகனான கோலுவிற்கும் இடையே சித்தி – மருமகன் என்ற உறவையும் தாண்டி நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் இவர்களது பழகும் விதம் குறித்து குடும்பத்தினருக்கு ஆரம்பத்தில் எந்தவொரு சந்தேகமும் எழவில்லை.

இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்த ஜோடி, அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் தனிமையில் சந்தித்துத் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த வாரம் அங்குள்ள குடும்பத்தினர் அனைவரும் ஒரு பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ரோஹிவாவில் உள்ள தாத்தா வீட்டில் ஒன்று கூடினர். அப்போது கோலுவும் தனது தாயாருடன் அங்கு வந்திருந்தார். பண்டிகை கொண்டாட்டங்களுக்கு நடுவே, மம்தாவும் கோலுவும் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி வெளியே சென்று வந்ததோடு, இரவிலும் தனிமையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஒரு நாள் இரவு மம்தா குமாரியின் தந்தை, மருந்து எடுப்பதற்காகத் தற்செயலாக அவரது அறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு மம்தாவும் கோலுவும் நெருக்கமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அவர், இருவரையும் பிடித்துக் கண்டித்துச் சத்தமிட்டுள்ளார். இவரது சத்தத்தைக் கேட்டு உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் அங்குத் திரண்டனர். இந்த விவகாரம் குறித்து மறுநாள் கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இறுதியில், உறவினர்கள் மற்றும் ஊர்ப் பெரியவர்களின் முன்னிலையில் இருவரையும் அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர். இவர்களது திருமண வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in