CINEMA
அவர் தான் என்னுடைய உலகம்… திருமணத்துக்கு அப்புறம் எதுக்கு…. நடிகை நிரோஷா ஓபன் டாக்…!!

நடிகை நிரோஷா எம்.ஆர் ராதாவின் மகள் ஆவார். இவர் தாலி பெண்ணுக்கு வேலி என்ற திரைப்படத்தில் தனது தந்தை எம்.ஆர் ராதாவின் மகளாகவே நடித்துள்ளார். ராதிகா, மோகன் ராதா ஆகியோர் இவருடன் பிறந்தவர்கள்.இவரது தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் ராதா ரவி. நடிகை நிரோஷா அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் நிரோஷா கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். பின்னர் நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை நிரோஷா, நான் சினிமாவுல பிஸியா நடிச்சிட்டு இருந்தப்போ கல்யாணமாகி செட்டில் ஆகவேண்டும் என்ற ஆசை மட்டுமே இருந்ததால் ராம்கியை காதலித்து திருமணம் செஞ்சிகிட்டேன். ராம்கி தான் என்னுடைய உலகம், திருமணத்திற்கு பிறகு எதுக்கு நடிக்கணும், வீட்டை பாத்துக்கிட்டு இருந்துவிடலாம் என்று நினைத்தேன் என்று கூறியுள்ளார்.