CINEMA
வடமாநிலங்கள் சிரிக்கின்றன…இதெல்லாம் தமிழ்நாட்டுக்கே அவமானம்…விஜய் ஆட்சியில் தவெகவினரே புலம்பும் நிலை? திருச்சி கிழக்கில் நடந்த ‘அந்த’ சம்பவம்…முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த பிரபல இசையமைப்பாளர்…!
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 2026 தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அவரது செயல்பாடுகள் மற்றும் திருச்சி கிழக்கு கூட்டத்தில் அவர் பேசிய பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்திலும், அவரது சொந்தக் கட்சியினரிடமும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து ஒரு காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தான் எழுதும் முதல் அரசியல் கருத்து இது என்று குறிப்பிட்டுள்ள அவர், வெறும் திரைக்கவர்ச்சியை மட்டுமே முதலீடாகக் கொண்டு ஒரு நடிகர் மாநிலத்தின் உயர்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டிற்கு நேர்ந்த அவமானம் என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அரசியல் அனுபவமோ, தொலைநோக்குப் பார்வையோ, மக்கள் நல அக்கறையோ இல்லாத ஒருவரை எப்படிப் போட்டியாளராகக் கருத முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள ஜேம்ஸ் வசந்தன், இதர நடிகர்களுடன் விஜய்யை ஒப்பிட்டுப் பேசியுள்ளார். எம்.பி.ஏ பட்டதாரியான சிவகார்த்திகேயன், அடிமட்ட வேலைகளைச் செய்து வளைகுடா நாடு வரை சென்று வாழ்க்கைப் போராட்டத்தை உணர்ந்த விஜய் சேதுபதி, தீவிர வாசிப்பாளரான கமல்ஹாசன் மற்றும் நடத்துனராக இருந்து பல சவால்களைச் சந்தித்த ரஜினிகாந்த் ஆகியோருக்குக் கூட நிஜ வாழ்க்கையின் அனுபவங்கள் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ செயல்பட்டால் தற்போது இருக்கும் சில அமைச்சர்களை விடச் சிறந்தவர்களாக இருக்க முடியும் என்றும், ஆனால் இவர்களைக் கூட நேரடியாக முதலமைச்சராக்கிவிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சினிமாவைத் தன் வாழ்க்கையாகப் பாவித்து, நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்தவர்களும், “தலைவா, தலைவி” என்று கூத்தாடியவர்களுமே இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் அமர்ந்திருக்கும் அவலநிலையைக் கண்டு வடமாநிலங்கள் சிரிப்பதாக ஜேம்ஸ் வசந்தன் சாடியுள்ளார். தமிழகத்தின் 1.6 கோடி வாக்காளர்கள் செய்த இந்தத் தேர்வால், இத்தனை காலம் கட்டிக்காத்த மாநிலத்தின் பெருமை ஒரே நாளில் சிதைந்து போயுள்ளது என்றும், இவருக்குப் பின்னால் நின்ற ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணே இவருடைய வெற்றியை நக்கல் அடித்ததே இதற்குப் சான்று என்றும் அவர் கூறியுள்ளார். இத்தகைய கடுமையான விமர்சனங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
