LATEST NEWS
ரஜினியுடன் ரகசிய திருமணமா…? செய்தியாளர்களிடம் பேட்டியளித்த … பிரபல நடிகை கவிதா…!

தமிழ் சினிமாவில் கடந்த 1976 ஆம் ஆண்டு ‘ஓ மஞ்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை கவிதா தமிழுக்கு அறிமுகமானார். இந்த படத்துக்கு பின் இவர் ரஜினி, கமல், சத்யராஜ் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த கவிதா தனது வாழ்க்கையில் நடந்த பல்வேறு சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது பேட்டியில் அவர்,’நானும் ரஜினியும் அதிகமான படங்களில் ஒன்றாக நடித்தோம். இதனால் எனக்கும் ரஜினிக்கும் இடையே ரகசிய திருமணம் நடைபெற்றதாக பத்திரிகையில் செய்திகள் வெளியாகின.
இதனால் கோபமடைந்த நான் செய்தி வெளிவந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கு நேரில் சென்று இப்படி உண்மை அல்லாத விஷயத்தை ஏன் எழுதுகிறீர்கள்? ‘ என்று முறையிட்டேன். பின்பு அப்பத்திரிகையாளர் தன் தவறை உணர்ந்து என்னிடம் மனம் வருந்தினார்.