ஒருவேளை ரஜினிகாந்த் வந்தியத்தேவனா நடிச்சிருந்தா எப்படி இருக்கும்….! கற்பனையில் உருவான புகைப்படம்….. செம வைரல்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒருவேளை ரஜினிகாந்த் வந்தியத்தேவனா நடிச்சிருந்தா எப்படி இருக்கும்….! கற்பனையில் உருவான புகைப்படம்….. செம வைரல்….!!!

Published

on

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் கடந்த 30-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இந்த திரைப்படம் 500 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தில் கார்த்திக், விக்ரம், திரிஷா ,ஜெயம் ரவி ,ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி,சரத்குமார் ,பிரகாஷ்ராஜ் ,பார்த்திபன் ,ஜெயராம்  உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர் .கிட்டத்தட்ட எம்ஜிஆர் காலத்தில் இருந்து இந்த திரைப்படத்தை எடுப்பதற்கு பலரும் முயற்சித்த நிலையில் கடைசியில் மணிரத்தினம் அவர்களால் தான் இது சாத்தியமாகியுள்ளது.அது மட்டும் இல்லாமல் வந்தியத்தேவன் கேரக்டருக்கு பல போட்டிகள் நிலவி வந்துள்ளது.

Advertisement

முதலில் எம்ஜிஆர் இந்த திரைப்படத்தை எடுக்க முற்பட்டபோது அவர்தான் வந்தியத்தேவன் கேரக்டரில் நடிப்பதாக இருந்தது .அதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் வந்தியத்தேவனாக நடிக்க வைப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் கமலஹாசன் இந்த திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்தபோது கூட வந்திய தேவனாக ரஜினிகாந்தை போடச் சொல்லியுள்ளார் சிவாஜி.

ரஜினி காந்த் ஒருவேளை வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று பலரும் கேட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து தற்போது ஒருவேளை ரஜினிகாந்த் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு புகைப்படத்தை கற்பனையாக வடிவமைத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in