பேத்தி வயது தான் இருக்கும்…! 57 வயதில் முதியவர் செய்த காரியம்… அதிர்ந்து போன பெற்றோர்… ஆப்பு வைத்த நீதிமன்றம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பேத்தி வயது தான் இருக்கும்…! 57 வயதில் முதியவர் செய்த காரியம்… அதிர்ந்து போன பெற்றோர்… ஆப்பு வைத்த நீதிமன்றம்…!!

Published

on

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆறு வயதுக் குழந்தையிடம் அநாகரிகமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சேவியர் என்ற பூம்பூம் சேவியரை (57), வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுமையாக நிரூபிக்கப்பட்டன.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் அதிரடித் தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கைச் சிறப்பாகக் கையாண்டு குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த காவல் துறை அதிகாரிகளையும், அரசு வழக்கறிஞரையும் மாவட்ட எஸ்பி பிரசண்ணகுமார் நேரில் பாராட்டினார்.

Advertisement

நெல்லை மாவட்ட காவல் துறையின் அதிரடி நடவடிக்கையால், நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான 11 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் பெற்றுத் தரப்பட்டுள்ளன. இதில் ஒருவருக்கு மரண தண்டனையும், இருவருக்கு ஆயுள் முழுக்கச் சிறை தண்டனையும், மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிமன்றம் மூலம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பைத் தங்களின் முதன்மைக் கடமையாகக் கொண்டு, அவர்களுக்கு எதிராகக் கொடும் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது இனிவரும் காலங்களிலும் சற்றும் தயக்கமின்றித் தீவிரமான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) எச்சரித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in