“காணாமல் போன 14 வயது சிறுமி…” ஆந்திராவுக்கு சென்றது எப்படி…? தேடி அலைந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காணாமல் போன 14 வயது சிறுமி…” ஆந்திராவுக்கு சென்றது எப்படி…? தேடி அலைந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

Published

on

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பள்ளிச் சிறுமி ஒருவர் திடீரெனக் காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், தங்களது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு பைக்காரா காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, உட்புரூக் பகுதியைச் சேர்ந்த தயானந்தன் என்கிற நவீன் (25) என்ற வாலிபர், அந்தச் சிறுமியை ஏமாற்றி ஆந்திர மாநிலத்திற்குத் கடத்திச் சென்றிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, தனிப்படை போலீசார் மகளிர் காவல் துறையினரின் உதவியுடன் ஆந்திராவிற்கு விரைந்து சென்று, கடத்தப்பட்ட பள்ளிச் சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவிற்கு அழைத்துச் சென்று அந்தச் சிறுமிக்குத் தயானந்தன் கடுமையான பாலியல் தொல்லைகள் கொடுத்தது அம்பலமானது. இந்த அராஜகச் செயலைத் தொடர்ந்து, சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டமான போக்சோவின் (POCSO) கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த தயானந்தனை அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in