CINEMA
தமிழ் சினிமாவிற்கு கருப்பு நாள்…ஜூலை 17 வந்தா 85 வயது.. அதற்குள் நேர்ந்த சோகம்…அவர்தான் எனக்கு முகவரி தந்தார்…” பாரதிராஜாவின் மறைவால் உடைந்துபோன கவுண்டமணி! உருக்கமான இரங்கல்…!
தமிழ் திரையுலகின் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா (84) அவர்கள், இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அடுத்த மாதம் ஜூலை 17-ஆம் தேதி தனது 85-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த நிலையில், அல்லிநகரத்து ராஜாவின் இந்த மறைவு ஒட்டுமொத்த சினிமா உலகையும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரில் வந்த வண்ணம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாரதிராஜாவின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த காமெடி ஜாம்பவான் கவுண்டமணி, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “16 வயதினிலே படம் தொடங்கி பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் எனப் பல படங்களில் நான் நடித்துள்ளேன்; குறிப்பாக, ’16 வயதினிலே’ திரைப்படத்தில் எனக்கு ஒரு சிறந்த முகவரியைக் கொடுத்தவர் பாரதிராஜா” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய கவுண்டமணி, தற்போது பாரதிராஜாவின் பிரிவாலும் மனதளவில் உடைந்து போயுள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு எதிரே உள்ள பாரதிராஜாவின் வீட்டிற்கு, திரையுலகினர் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று டெல்லி செல்லவிருந்த நிலையிலும், மறைவுச் செய்தி அறிந்தவுடன் முதல் நபராக இயக்குநர் மணிரத்னம் பாரதிராஜாவின் இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நேரில் வருகை தந்து, தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்த இயக்குநர் இமயத்திற்குத் தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.
