அவரை அனாதையா சாகவிட்டுட்டீங்களே…பாரதிராஜா மரணத்தில் குடும்ப சர்ச்சை…அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் வெடித்த மோதல்…கங்கை அமரன் ஆவேசத்திற்கு தம்பி ஜெயராஜ் கொடுத்த நெத்தியடி பதில்…! – cinefeeds
Connect with us

CINEMA

அவரை அனாதையா சாகவிட்டுட்டீங்களே…பாரதிராஜா மரணத்தில் குடும்ப சர்ச்சை…அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் வெடித்த மோதல்…கங்கை அமரன் ஆவேசத்திற்கு தம்பி ஜெயராஜ் கொடுத்த நெத்தியடி பதில்…!

Published

on

தமிழ் சினிமாவின் இமயமாய் திகழ்ந்த இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது இறுதி அஞ்சலியின் போது இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆதங்கத்தில் பேசிய பேச்சு சோசியல் மீடியாவில் பெரும் புயலைக் கிளப்பியது. பாரதிராஜாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, அங்கு வந்த அவரது மனைவியைப் பார்த்ததும் கங்கை அமரன் அப்படியே உணர்ச்சிவசப்பட்டு வெடித்தார். “அவரை இப்படி தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே… சாகும்போது அவரை அனாதையாக சாகவிட்டுவிட்டீர்களே!” என்று அவர் முகத்திற்கு நேராகவே கத்திய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, “கடைசி காலத்தில் பாரதிராஜாவை குடும்பத்தினர் யாரும் கவனிக்கவில்லையா?” என்ற காரசாரமான விவாதங்களை நெட்டிசன்கள் மத்தியில் எழுப்பியது.

இணையத்தில் பூதாகரமான இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பாரதிராஜாவின் உடன் பிறந்த தம்பியான ஜெயராஜ் தற்போது ஊடகங்களைச் சந்தித்து அதிரடி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். கங்கை அமரன் தங்களது குடும்பத்தில் ஒருவர் போன்றவர் என்று குறிப்பிட்ட ஜெயராஜ், அண்ணன் பாரதிராஜா மீது அவருக்கு இருந்த அதிகப்படியான பாசத்தின் காரணமாகவே, உண்மை என்னவென்று தெரியாமல் அந்த ஆதங்கத்தில் அப்படி உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டார் என்று தெரிவித்தார். மேலும், பாரதிராஜாவின் மனைவி அவரை எப்போதும் மிக நன்றாகவே கவனித்துக் கொண்டார் என்றும், இதில் மக்கள் தவறாகப் புரிந்துகொள்ள எதுவுமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Advertisement

அன்று நடந்த நிஜமான பின்னணி குறித்துப் பேசிய ஜெயராஜ், சம்பவத்தன்று தேனியில் ஒரு முக்கியமான குடும்ப நிகழ்ச்சி இருந்ததால், அதில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில் பாரதிராஜாவின் மனைவி அங்கு சென்றிருந்ததாகக் கூறினார். துரதிர்ஷ்டவசமாக அவர் தேனிக்குச் சென்று இறங்கிய அதே நேரத்தில் தான் சென்னையில் பாரதிராஜா காலமானார் என்ற துயரச் செய்தி வந்ததாகவும், தகவல் தெரிந்த அடுத்த கணமே அவர் பதறியடித்துக்கொண்டு மீண்டும் சென்னைக்குக் கிளம்பி வந்துவிட்டதாகவும் விளக்கினார். இந்த விபரம் தெரியாமல் பேசிய கங்கை அமரனிடம் பின்னர் பேசி சூழ்நிலையைப் புரிய வைத்துள்ளதாகவும், தற்போது அவர்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இன்றி எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்டது என்றும் கூறி ஜெயராஜ் இந்த வதந்திகளுக்கு எண்ட் கார்டு போட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in