CINEMA
பெற்ற தகப்பனை இழந்த துயரம்…பாரதிராஜாவின் ஆசி தங்களுக்கு மட்டுமில்ல.. தன் மகள்களுக்கும் வேணும்…நெற்றியில் திருநீறு போல ‘அதை’ பூசிக்கொண்ட சினேகன் மனைவி… சோசியல் மீடியாவில் வைரலாகும் உருக்கமான வீடியோ…!
தமிழ் சினிமாவின் இமயமாய் விளங்கி அண்மையில் மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் சமாதிக்கு, அவரிடம் மகன் போன்ற அன்பைப் பெற்று விளங்கிய பாடலாசிரியர் சினேகன் தனது குடும்பத்துடன் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். பாரதிராஜா மீது அளவற்ற பற்றும் மரியாதையும் கொண்டவர் கவிஞர் சினேகன்; பாரதிராஜாவும் சினேகனைத் தனது சொந்த மகன் போலவே பாவித்து வந்தார். தேனி மாவட்டம் கங்குவார்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சினேகன், அவரது மனைவி கன்னிகா மற்றும் அவர்களது இரட்டை மகள்கள் அங்கு நேரில் சென்று தங்களது ஆழமான துயரத்தைப் பகிர்ந்துள்ளனர்.
பாரதிராஜாவின் சமாதியை வணங்கிய சினேகன் குடும்பத்தினர், மிகுந்த மரியாதையுடன் அந்தச் சமாதியில் இருந்த புனித மண்ணை எடுத்து, நெற்றியில் திருநீறு பூசுவதைப் போலத் தங்களது நெற்றியில் இட்டுக் கொண்டனர். மேலும், தங்களது பிஞ்சுக் குழந்தைகளுக்கும் அந்த மண்ணைத் தொட்டு நெற்றியில் திலகமிட்டு ஆசி பெற்றனர். இந்த நெகிழ்ச்சியான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சினேகனின் மனைவி கன்னிகா, “ஒரு மானுடக் கலைஞன் இளைப்பாறும் இடம்… இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அன்பின் ஆசீர்வாதம் எங்களுக்குக் கிடைத்தது போல், எங்கள் மகள்களுக்கும் கிடைக்கப் பிரார்த்தனை செய்தோம்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பாரதிராஜா மறைந்த சமயத்திலேயே, “என் தகப்பனாரின் மரண துயரத்திற்கு இணையான துயரத்தில் ஆழ்ந்து கிடக்கிறது மனசு; இவரின் கரம் பிடித்து நடந்திருக்கிறேன்” என சினேகன் உருகியிருந்தார். பெற்ற தகப்பனை இழந்தது போன்ற துயரத்தில் இருந்த சினேகன், தற்போது தனது ஒட்டுமொத்த குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் சென்று தங்களது ‘குடும்பப் பெரியவரின்’ ஆசியைப் பெற்று வந்திருப்பது ஒட்டுமொத்த இணையவாசிகளையும், திரையுலகினரையும் பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அஞ்சலி குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
