CINEMA
மகன் மனோஜ் மரணம் தான் காரணமா…இரண்டு பெண் குழந்தைகளை விட்டுட்டு.. மகனின் நினைவாகவே பிரிந்த பாரதிராஜாவின் உயிர்…கண்ணீரில் ராதாரவி சொன்ன ரகசியம்…!
தமிழ் சினிமாவின் கிராமியக் கதைகளின் தந்தை என்று அழைக்கப்படும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், ஓரளவிற்கு குணமடைந்து மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வைரமுத்து, ராதிகா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்குத் தமிழ்நாடு அரசு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளதை அடுத்து, வத்தலகுண்டு அருகே இருக்கும் காட் ரோடு பண்ணை வீட்டில் அவரது உடல் இறுதி மரியாதைக்காகவும், அடக்கத்திற்காகவும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பாரதிராஜாவின் இந்த திடீர் உடல்நலச் சரிவிற்கும் மறைவிற்கும் அவரது மகன் மனோஜின் மரணமே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அவரது மகன் மனோஜ் மறைந்ததைத் தொடர்ந்து, பாரதிராஜா மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் முற்றிலும் உடைந்து போனார். “தன் மகன் இரண்டு பெண் பிள்ளைகளை விட்டுவிட்டு, இந்த இள வயதில் போய்விட்டானே” என்று அவர் தொடர்ந்து வேதனையில் இருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். கங்கை அமரன் போன்ற நண்பர்கள் அவரைத் தேற்றி, பழைய நிலைக்குக் கொண்டுவர முயன்ற போதிலும், மகனின் இழப்பை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இதற்கிடையே, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கங்கை அமரன் குடும்பத்தினரிடம் உணர்ச்சிவசப்பட்டுக் பேசிய சில விஷயங்கள், குடும்பத்திற்குள் ஏதேனும் பிரச்சினைகள் இருந்ததா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இந்நிலையில், பாரதிராஜாவின் மறைவு குறித்துப் பேசியுள்ள நடிகர் ராதாரவி, “மகன் மனோஜ் இறந்தபோது அவருடன் பேசாமல் இருந்ததால், அந்தப் பிரிவு பாரதிராஜாவை ரொம்பவே பாதித்துவிட்டது. சிறந்த இயக்குநராக இருந்தாலும், அவரது குடும்பத்திற்குள் சில சிக்கல்கள் இருந்தன; அதனால்தான் அவர் படம் இயக்குவதையே நிறுத்தியிருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 85 வயதான பாரதிராஜா வாழ்க்கையில் பார்க்காத வெற்றிகளோ, வாங்காத விருதுகளோ இல்லை என்றும், அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்ட அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் ராதாரவி தெரிவித்துள்ளார். திரையுலகின் ஒரு பொற்காலம் பாரதிராஜாவின் மறைவோடு முடிவுக்கு வந்துள்ளதாக ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
