தவெக ஆட்சியில் 4 காவல் மரணங்கள்… சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் விஜய் வெறும் ஜீரோ… திமுக பரந்தாமன் அதிரடி குற்றச்சாட்டு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தவெக ஆட்சியில் 4 காவல் மரணங்கள்… சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் விஜய் வெறும் ஜீரோ… திமுக பரந்தாமன் அதிரடி குற்றச்சாட்டு..!!

Published

on

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் கடந்த 60 நாட்களில் நான்கு காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஐ. பரந்தாமன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகர்கோவிலில் 200 கிராம் குட்கா வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞரை தவெக அரசு படுகொலை செய்துள்ளதாகக் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், இந்த சபரிவர்மனின் காவல் மரண விவகாரத்தைத் திசைதிருப்பும் நோக்கிலேயே முதலமைச்சர் விஜய் தற்போது பெரம்பூருக்குச் சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தவெகவைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு சட்டம், சாதாரண பொதுமக்களுக்கு ஒரு சட்டம் என்ற இருவேறு போக்குகளுடன் இந்த அரசு செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், சினிமாவில் ஹீரோவாக இருக்கும் விஜய், ஆட்சி அதிகாரத்தைப் பொறுத்தவரை வெறும் ‘ஜீரோ’ தான் என்றும் காரசாரமாகத் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in