LATEST NEWS
BREAKING: நாளை இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!
தென்காசி மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு முக்கிய உள்ளூர் திருவிழாக்களை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர். தென்காசி சங்கரநாராயணர் கோயில் புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழாவை ஒட்டி ஜூலை 28-ம் தேதியும், கொல்லிமலை வல்வில் ஓரி விழாவைக் கொண்டாடும் வகையில் நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ம் தேதியும் இந்த உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் பொருட்டு மாற்று வேலை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தென்காசி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1-ம் தேதியும், நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 27-ம் தேதியும் சனிக்கிழமைகளில் முழு வேலை நாட்களாகச் செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறை அறிவிப்பானது பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அவசரப் பொது நிதித் துறை அலுவலகங்களுக்குப் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
