LATEST NEWS
நொடியில் நடந்த சோகம்!.. ஷாப்பிங் செய்தபோது நேர்ந்த விபரீதம்… முதல் மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி..!!
கர்நாடக மாநிலம் சிக்மகளூரு பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், பெற்றோர் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முதல் மாடியின் கைப்பிடிச் சுவரிலிருந்து கீழே விழுந்த 4 வயது குழந்தை மிகக் கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ‘பிள்ளப்பா காம்ப்ளக்ஸ்’ என்ற வணிக வளாகத்தில் நடந்த இந்த விபத்தில், ககன் சிந்து என்ற அந்த குழந்தை சில நிமிடங்கள் கவனிக்கப்படாமல் தனியாக விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த குழந்தை அங்கிருந்த கைப்பிடிச் சுவரின் மீது ஏற முயன்றபோது, நிலைதடுமாறி கட்டிடத்தின் அடித்தளப் பகுதியில் விழுந்துள்ளான். இந்த நெஞ்சை பதறவைக்கும் ஒட்டுமொத்தக் காட்சியும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
A four-year-old child sustained critical injuries after accidentally falling from the first-floor railing of a commercial building while the parents were shopping in Chikkaballapur, Karnataka.
The incident occurred at Pillappa Complex, where the child, identified as Gagan… pic.twitter.com/HDpTQYF2Gi— Hate Detector 🔍 (@HateDetectors) July 14, 2026
கீழே விழுந்ததில் அந்த குழந்தைக்கு மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தற்போது அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ள நிலையில், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்குச் செல்லும்போது குழந்தைகளை எப்போதும் தங்களது தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று பெற்றோரையும் பாதுகாவலர்களையும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
