LATEST NEWS
“ஐயோ கடவுளே… “கதவைத் திறந்த அடுத்த நொடி… மேலிருந்து வந்த எமன்..!” கோவில் லிஃப்ட்டில் தியவருக்கு நேர்ந்த கொடூரம்… வெளியான பகீர் வீடியோ..!!
கர்நாடக மாநிலம் சிவமோகாவில் உள்ள விநாயகா நகரில் அமைந்திருக்கும் தத்தாத்ரேய சுவாமி கோவிலில், மின் தூக்கியின் அடியில் சிக்கி 80 வயதான ஓய்வுபெற்ற பொறியாளர் குமாரசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிவமோகா வினோபா நகரைச் சேர்ந்த இவர், ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் இரத்தப் பரிசோதனைக்காகச் சென்றுவிட்டு, அப்படியே தத்தாத்ரேய சுவாமி கோவிலுக்குச் செல்வதாகத் தனது மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் காலை 9 மணியளவில், கோவில் மின் தூக்கியில் சிக்கி குமாரசாமி படுகாயமடைந்துள்ளதாகக் குடும்ப நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து தகவல் தெரிவித்துள்ளார்.
An 80-year-old retired engineer, identified as Kumaraswamy, tragically died after becoming trapped beneath an elevator car at the Dattatreya Swamy Temple in Vinayaka Nagar, Shivamogga.
According to official complaint details lodged at the Jayanagar Police Station, the incident… pic.twitter.com/rvxGLwsLS2— Hate Detector 🔍 (@HateDetectors) August 3, 2026
கோவிலில் மேல்தளத்திற்குச் செல்வதற்காக குமாரசாமி மின் தூக்கியின் பொத்தானை அழுத்தியுள்ளார். மின் தூக்கி வந்துவிட்டதாகக் கருதி, அதன் வெளியிலிருக்கும் மேனுவல் கதவைத் திறந்து அவர் உள்ளே கால் வைத்துள்ளார். ஆனால், அந்த நேரத்தில் மின் தூக்கி மேல்தளத்தில் இருந்துள்ளது. குமாரசாமி கீழே இறங்கிய அடுத்த கணமே, மேலிருந்து கீழ்நோக்கி வந்த மின் தூக்கி அவர் மீது பலமாக மோதி அடியில் அமுக்கியதில் அவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த கர்நாடக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், அவரை மின் தூக்கிப் பாதையிலிருந்து மீட்டு சிகிச்சைக்காக மெக்கான் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து அவரது மனைவி லலிதா அளித்த புகாரின் பேரில் ஜெயநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் தூக்கி இல்லாதபோது வெளியிலிருக்கும் கதவு எவ்வாறு திறந்தது, அதில் எதேனும் இயந்திரக் கோளாறு அல்லது பாதுகாப்பு லாக் குறைபாடு இருந்ததா என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
