LATEST NEWS
குட் நியூஸ்..! நாளைக்குள் பி.எஃப் வட்டித்தொகை வரவு… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!
மத்திய அரசு நாடெங்கும் உள்ள 34 கோடி தொழிலாளர்களின் பி.எஃப் கணக்குகளில் ரூ.1.44 லட்சம் கோடி வட்டித்தொகையை ஜூலை 15-ஆம் தேதிக்குள் வரவு வைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. வழக்கமாக செலுத்தப்படும் காலத்தை விட இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே வட்டித்தொகை வழங்கப்படுவது அரசு மற்றும் தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தொழிலாளர்கள் தங்களுக்குரிய வட்டித்தொகை விவரங்களை உடனடியாகவும் எளிதாகவும் ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்களின் பி.எஃப் கணக்கில் லாக்-இன் செய்து அல்லது பிரத்யேக மொபைல் செயலி மூலம் தங்களது கணக்கு இருப்பை எப்போது வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
