“தப்பு நடந்திருக்கு” பழனியில் ரூ.100 கோடி கோயில் நில முறைகேடு… உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர் ரமேஷ்.. பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தப்பு நடந்திருக்கு” பழனியில் ரூ.100 கோடி கோயில் நில முறைகேடு… உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர் ரமேஷ்.. பெரும் பரபரப்பு..!!

Published

on

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த விவகாரத்தில், சார்பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விடுப்பில் சென்ற சார்பதிவாளர் இந்த நிலத்தைப் பதிவு செய்யக்கூடாது என எழுதி வைத்திருந்த நிலையில், விடுப்பு முடிந்து வந்த சார்பதிவாளர் அதனைச் சரிவர கவனிக்காமல் தவறாகப் பதிவு செய்து கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சட்டப்படி கோயில் நிலம் முழுமையாக மீட்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தனது உறவினருக்கு அந்த நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in