LATEST NEWS
விஜய்தான் களவாணி.. அதிமுக MLA-க்களை திருடுகிறார்… தமிழ்நாட்டுல ஆட்சினு ஒன்று நடக்குதா.? சேலத்தில் முதல்வர் விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்..!!
சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசை மிகக் கடுமையாகச் சாடினார். அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தங்களது பக்கம் இழுக்க முயற்சிக்கும் முதல்வர் விஜய்தான் உண்மையான ‘களவாணி’ என்று அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தற்போதைய தமிழ்நாட்டில் முறையான ஆட்சி என்று ஒன்று நடக்கிறதா என்பதே பெரும் சந்தேகமாக உள்ளது என்று விமர்சித்தார். அதிமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும், பொதுமக்களின் நலனுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று அவர் உறுதியளித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்ததை அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் சேலம் மாவட்டம் எப்போதுமே அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கி வருகிறது என்று அவர் தனது பேட்டியில் மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
