தமிழனின் வேஷ்டி சட்டைக்கு அனுமதி இல்லையா?.. விராட் கோலி ஹோட்டலில் youtube பிரபலத்திற்கு ஏற்பட்ட அவலம்.. பொங்கும் ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

VIDEOS

தமிழனின் வேஷ்டி சட்டைக்கு அனுமதி இல்லையா?.. விராட் கோலி ஹோட்டலில் youtube பிரபலத்திற்கு ஏற்பட்ட அவலம்.. பொங்கும் ரசிகர்கள்..!!

Published

on

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சமீபத்தில் உலகக்கோப்பை தொடரில் 725 ரன்கள் குவித்து மாபெரும் சாதனை படைத்தார். சச்சினுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் முகமாக இருந்து வரும் விராட் கோலி பல சாதனைகளை படைத்து வருகின்றார். இவர் கிரிக்கெட் மட்டுமல்லாமல் பல தொழில்களை நடத்தி வரும் நிலையில் ஆடை விற்பனை மற்றும் ஹோட்டல் தொழில்களை இந்தியா முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.

இவர் one 8 commune என்ற ஹோட்டலை நடத்தி வரும் நிலையில் முதலில் பெங்களூரில் தொடங்கிய இந்த ஹோட்டல் அடுத்தடுத்து மும்பை மற்றும் ஹைதராபாத் என பல நகரங்களில் திறக்கப்பட்டது. பிரபலங்கள் பலரும் இந்த ஹோட்டலில் அடிக்கடி சென்று உணவு அருந்தும் புகைப்படங்கள் வைரலாகி வருவது வழக்கம். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ராம் என்பவர் மும்பைக்கு சென்ற நிலையில் விராட் கோலியின் ஓட்டலில் உணவருந்துவதற்காக சென்று உள்ளார்.

Advertisement

இவர் நட்சத்திர ஹோட்டலில் சங்கியிருந்தாலும் அந்த ஹோட்டல் உணவை தவிர்த்து விட்டு விராட் கோலியின் பெயருக்காக அருகே உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். இதற்காக இவர் பிரத்தியேகமாக புதிய வேஷ்டி மற்றும் சட்டை அணிந்து சென்ற நிலையில் ஹோட்டலுக்குள் சாப்பிட உள்ளே செல்ல முயன்ற போது அங்கிருந்த நிர்வாகிகள் அவரை தடுத்து நிறுத்தினர். அவரை அனுமதிக்க முடியாது என்று கூறியது மட்டுமல்லாமல் டிரஸ் கோடுக்கு அனுமதி இல்லை என்று கூறி வெளியேற்றியுள்ளனர். தற்போது அந்த வீடியோ அவர் பகிர்ந்து உள்ள நிலையில் இதனைப் பார்த்த விராட் கோலியின் ரசிகர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ramanathan Asokan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@raavanaa_ram)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement