ஆஸ்கர் வாங்க ரெடியா வந்துள்ள… பா.ரஞ்சித்தின் தங்கலான் படம்… வெளியானது படத்தின் நெஞ்சை பதற வைக்கும் டீஸர்…!.! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆஸ்கர் வாங்க ரெடியா வந்துள்ள… பா.ரஞ்சித்தின் தங்கலான் படம்… வெளியானது படத்தின் நெஞ்சை பதற வைக்கும் டீஸர்…!.!

Published

on

தமிழில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தங்கலான் ஆகும். இப்படத்தினை குறித்து பா. ரஞ்சித் மெட்ராஸ் படத்தில் பணியாற்றியபொழுது விக்ரமிடம் கூறியுள்ளார்.இதற்கு விக்ரம் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும் சில காரணங்களால் படம் இயக்குவதில் தாமதமானது.  பின்பு படமானது 2021 ஆம் ஆண்டு ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி உள்ளது.

இதற்கு முதலில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார் என்ற தகவல் வந்தது . ஆனால்  ஜி.வி. பிரகாஷ் தான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இதில் முதலில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக ஒப்பதம் செய்ய முடிவு செய்தனர். பின்னர் இவரின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படமானது கர்நாடகாவில் உள்ள கோலார் கோல்டு field  படத்தின் பின்னணி என்றும் கூறப்படுகிறது.

Advertisement

மேலும் இப்படமானது 19ஆம் நூற்றாண்டில் தங்கத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளிகளின் வரலாற்றை பற்றிய நிகழ்வை கூறும் படமாகும். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நடைபெற்று கொண்டியிருக்கிறது. இவ்விழாவில் தற்பொழுது படத்தின் ட்ரைலர் வெளியிட்டு உள்ளனர் படக்குழுவினர்.

இதில் ஈட்டியுடன் காட்சி அளிக்கிறார் சீயான் விக்ரம். பின்பு ஒரு காட்சியில் தன்னை கடித்த நல்ல பாம்பினை அப்படியே ரெண்டாக பிளந்து தூக்கி எறிகிறார். மேலும் சடை விழுந்த முடியுடன் தொப்பையுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு கண்டிப்பாக ஆஸ்கர் விருது கிடைக்கும் என்பது இந்த டீஸர் பார்த்தாலே தெரிகிறது. மேலும் இப்படம் வரும் ஜனவரி 26ம் தேதி திரைக்கு வரவுள்ளது. படத்தின் trailer link கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in