VIDEOS
மர்மமான முறையில் மரணமடைந்துள்ள… கவர்ச்சி நடிகையின் உறவினர்… பரபரப்பான விருகம்பாக்கம்…!
தமிழில் பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்தவர் நடிகை மாயா ஆகும் . இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் தீவிர விசுவாசியாவார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மேலும் இவர் நடிகை பாபிலோனாவின் அத்தை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் உள்ள தசரத புரம் 8வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 40 வயதில் தனியாக வசித்துவரும் மாயாவின் மகனான விக்னேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் .
இந்நிலையில் காலையில் இருந்து போன் செய்தும் விக்னேஷினிடம் இருந்து பதில் வராததால் சமீபத்தில் அவரது நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். விக்னேஷ் வீட்டின் கதவு உள்நோக்கி அடைக்கப்பட்டிருந்ததாகவும், நீண்ட நேரம் தட்டியும் அவர் திறக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
பின்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விக்னேஷ் படுக்கையறையில் பிணமாக கிடந்துள்ளார். உடனடியாக வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகாவில் உள்ள கீழ்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை போலீசார் அனுப்பி வைத்தனர்.
விக்னேஷ் கடந்த பல ஆண்டுகளாக இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்ததாகவும், அவரது வீட்டில் இருந்து ஏராளமான காலி மதுபாட்டில்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விக்னேஷ் மது போதையால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது, முதல் கட்ட விசாரணை முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் ஸ்டேஷனில் விக்னேஷ் தீவிர குற்றப் பின்னணி வைத்திருப்பவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டு, திரையுலக பிரபலங்களுடன் பிரச்சனை செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விருகம்பாக்கத்தில் உள்ள கண்ணன் என்பவருடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக கண்ணன் தனது 10 நண்பர்களுடன் விக்னேஷை அருவாளால் தாக்கி உள்ளார். இதனால் விக்னேஷிற்கு 10 இடங்களில் பலத்த வெட்டு பட்டு உயிருக்கு போராடி மீண்டுவந்துள்ளார். இதைபோல் வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அவரது மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் விக்னேஷின் தாய் மாயா, தனது மகனின் மரணத்தில் சந்தேகம் எழுப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சந்தேகத்திற்கிடமான மரணம் என காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.