LATEST NEWS
“ஸ்மார்ட் கிளாஸை ‘பாராக’ மாற்றிய ஆசிரியர்.. மது போதையில் போட்ட குத்தாட்டம்.. இணையத்தை கொதிக்க வைத்த வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபாவில், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், போதையில் மிதந்து ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள எல்.இ.டி திரையில் போஜ்புரி பாடலைப் போட்டு உல்லாசமாக நடனமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டிய வகுப்பறையை, மது அருந்திவிட்டு கேளிக்கை விடுதி போல மாற்றிய அந்த ஆசிரியரின் செயல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடுமையான கண்டனங்களைப் பெற்று வருகிறது.
लाखों रुपए वेतन उठाने वाले यूपी में महोबा के एक सरकारी मास्टर साहब इतना नशे में धुत हो गए की स्मार्ट क्लास रूम के अंदर एलइडी में भोजपुरी गाना लगाकर मस्ती में डूब गए हैं
ऐसे मास्टर शिक्षा के नाम पर कलंक है इसका निलंबन तुरंत होना चाहिए और इसकी सारी सेवाएं भी समाप्त की जानी चाहिए pic.twitter.com/4UT06w8cEB— Shailesh Verma (@shaileshvermasp) July 11, 2026
கல்வி என்ற புனிதமான பெயருக்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்திய இதுபோன்ற ஆசிரியர்கள் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், அவரது சேவைகள் அனைத்தும் நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்புடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எதிர்கால சந்ததியினருக்குப் பாடம் புகட்ட வேண்டிய ஒருவரே இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டது கல்வித் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
