“என் மனைவியோடு பழக்கமா?”.. நட்டநடு ராத்திரியில் ஏரிக்கரையில் நடந்த கொடூரத்தின் உச்சம்.. கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய கணவன்.. அரக்கோணத்தை உலுக்கிய சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் மனைவியோடு பழக்கமா?”.. நட்டநடு ராத்திரியில் ஏரிக்கரையில் நடந்த கொடூரத்தின் உச்சம்.. கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய கணவன்.. அரக்கோணத்தை உலுக்கிய சம்பவம்..!!

Published

on

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தணிகைபோளூர் ஏரியில், கடந்த 5-ஆம் தேதி வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீசாரின் தீவிர விசாரணையில், கொலையுண்டவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த டீ மாஸ்டரான ஹேமநாதன் (எ) சின்னா 23 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. கட்டிட வேலைக்குச் சென்ற இடத்தில், கவிதா என்ற பெண்ணுடன் ஹேமநாதனுக்கு ஏற்பட்ட கள்ளத்தொடர்பே இந்த கொடூரக் கொலைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

கவிதாவின் கள்ளத்தொடர்பை அறிந்த அவரது கணவர் சங்கர் மற்றும் கவிதாவின் மீது ஆசை கொண்ட மற்றொரு நண்பரான ஆட்டோ டிரைவர் ஆனஸ்ட் ஆகிய இருவரும் இணைந்து இக்கொலையை அரங்கேற்றியுள்ளனர். சம்பவத்தன்று கவிதாவின் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்த ஹேமநாதனை சமாதானம் செய்வது போல் ஆட்டோவில் அழைத்துச் சென்று, தணிகைபோளூர் ஏரிக்கரையில் வைத்து உருட்டுகட்டை மற்றும் கத்தியால் தாக்கி முகத்தை சிதைத்துக் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் சங்கர், கவிதா மற்றும் ஆனஸ்ட் ஆகிய மூவரையும் கைது செய்த அரக்கோணம் தாலூகா போலீசார், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in