CRIME
கொடூரத்தின் உச்சி…! பெற்ற பிள்ளைகளின் கை, கால்களில்… ஒயர் சுற்றி மின்சாரம் பாய்ச்சி கொன்ற தந்தை… தூத்துக்குடியில் அதிர்ச்சி பின்னணி..!!!
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் மரிய மைக்கேல். லாரி ஓட்டுநரான இவருக்கு, 9-ஆம் வகுப்பு படிக்கும் மரிய நிரோஷா என்ற மகளும், 7-ஆம் வகுப்பு படிக்கும் மரிய கெனிஸ்டன் என்ற மகனும் இருந்தனர். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி சபிதாரோனிகம் இவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இதனால் மரிய மைக்கேல் தனது தந்தை மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், மனைவியின் பிரிவால் கடந்த சில நாட்களாக கடும் மனவேதனையில் இருந்துள்ளார்.
சம்பவம் நடந்தன்று இரவு மரிய மைக்கேல் தனது குழந்தைகளுடன் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்தார்; அவரது தந்தை வீட்டின் வெளியே படுத்திருந்தார். நள்ளிரவில், மன உளைச்சலில் இருந்த மரிய மைக்கேல், தூங்கிக் கொண்டிருந்த தனது மகள் மற்றும் மகனின் கை, கால்களில் மின்சாரக் கம்பியை சுருட்டி மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளார். இதில் இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, மரிய மைக்கேலும் தனது காலில் மின்கம்பியைச் சுற்றிக்கொண்டு மின்சாரத்தைப் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.
மறுநாள் காலை வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால், தகவலறிந்து வந்த புதுக்கோட்டை காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மூவரும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இந்த தற்கொலை மற்றும் கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
