CRIME
“‘நான் 6 பேரை கொலை செய்துவிட்டேன், இனி நான்” திடீரென வந்த அந்த ஒரு போன்கால்… கிராமத்தையே அதிரவைத்த கொலைகாரனின் இறுதி வார்த்தை..!!
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சாபாத் பகுதியில், போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ராஜ் குமார் என்ற நபர், பழிவாங்கும் நோக்கில் 17 வயது சிறுமி, அவரது தாய், பாட்டி மற்றும் தனது சொந்த மனைவி, இரு குழந்தைகளையும் சேர்த்து மொத்தம் 6 பேரை கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளார். கடந்த மே மாதம் 16-ஆம் தேதி 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ராஜ் குமார் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் காவல் நிலைய ஜாமீன் மூலம் அவர் அண்மையில் வெளியே வந்த நிலையில், தன் மீது புகார் அளித்த குடும்பத்தினரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
அதன்படி, சாபாத்தில் உள்ள தகுடப்பள்ளி கிராமத்திற்குச் சென்ற ராஜ் குமார், போக்சோ வழக்கின் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது தாய் லட்சுமி (45), பாட்டி ருக்கம்மா (65) ஆகியோரைச் சராமாரியாகக் குத்திக் கொலை செய்தார். இத்தோடு நிறுத்தாமல், தனது சொந்த மனைவியான சரிதா (30) மற்றும் 3 வயது, 2 வயதுடைய தனது இரு பிஞ்சு மகன்களையும் கொடூரமாக வெட்டிக் கொன்றார். சமூகத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்குப் பழிவாங்கவே இந்த விபரீத முடிவை எடுத்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்தக் கொடூரக் கொலைகளை அரங்கேற்றிய பின் தப்பியோடிய ராஜ் குமார், தனது பெற்றோருக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, “நான் 6 பேரை கொலை செய்துவிட்டேன், இனி நான் சாகப் போகிறேன்” என்று கூறிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் சோகமும் நிலவி வரும் நிலையில், குற்றவாளி தற்கொலை போன்ற தீவிர முடிவுகளை எடுப்பதற்குள் அவரைப் பிடிக்கப் போலிஸார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
