“ஜாமீனில் வந்ததன் விளைவு..! போக்சோ புகாரால் ஏற்பட்ட பகையில்… 6 உயிர்களைப் பலிவாங்கிய கொடூரப் பின்னணி..!!!” – cinefeeds
Connect with us

CRIME

“ஜாமீனில் வந்ததன் விளைவு..! போக்சோ புகாரால் ஏற்பட்ட பகையில்… 6 உயிர்களைப் பலிவாங்கிய கொடூரப் பின்னணி..!!!”

Published

on

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் ஷாபாத் பகுதியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. தன் மீது கடந்த மே மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளித்த 16 வயது சிறுமியின் குடும்பத்தைப் பழிவாங்குவதற்காக, ஜாமீனில் வெளியே வந்திருந்த 35 வயது விவசாயி ஒருவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். நள்ளிரவில் சிறுமியின் வீட்டிற்குச் சென்ற அவர், கதவைத் திறந்த சிறுமியின் 42 வயது தாயையும், தூங்கிக் கொண்டிருந்த 60 வயது பாட்டியையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர் அந்தச் சிறுமியைத் தனது காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்று, கிராமத்து ஏரிக்கரையில் வைத்து அவரையும் கொடூரமாகக் கொலை செய்து உடலை அங்கேயே வீசிச் சென்றுள்ளார்.

சிறுமியைக் கொலை செய்த பின்னர், அந்த நபர் தனது சொந்த வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அங்கு நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த தனது 31 வயது மனைவி, மற்றும் 4 வயது, 18 மாதங்களே ஆன தனது இரண்டு மகன்கள் ஆகிய மூவரையும் தொண்டையை அறுத்து மிகக் கொடூரமாகக் கொலை செய்தார். ஒரே இரவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேரை இரக்கமின்றித் துடிதுடிக்கக் கொன்ற பின்னர், அவர் ஷாபாத் நகரில் வசிக்கும் தனது தந்தைக்குத் தொலைபேசி மூலம் தான் செய்த குற்றத்தைக் கூறிவிட்டு காரில் தப்பியோடிவிட்டார்.

Advertisement

https://x.com/jsuryareddy/status/2075752880100028769?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2075752880100028769%7Ctwgr%5E61acf5e1f6e22de2d9d346cb1d6b6c6a4631bd56%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Findia%2Fhyderabad-horror-pocso-accused-kills-6-including-wife-children-complainants-family-in-rangareddy-video

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். குற்றவாளிக்கு எதிராக மே மாதம் சிறுமியைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகப் போக்சோ வழக்குத் தொடரப்பட்டதும், ஜூன் மாதம் அவர் நீதிமன்றத்தில் இருந்து முன்ஜாமீன் பெற்று வெளியில் வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய அந்தக் கொடூரக் குற்றவாளியைப் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தற்போது தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in