CRIME
“ஏங்க இது ரொம்ப தப்புங்க”.. ரூ.2.6 லட்சத்தை பிடுங்கிக்கொண்டு முதியவருக்கு செய்த விபரீத சிகிச்சை.. பதற வைக்கும் பின்னணி..!!
சீனாவில் பல் வலிக்காக மருத்துவமனைக்குச் சென்ற லி என்ற 63 வயது முதியவருக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “காலையில் பல்லைப் பொருத்திக் கொண்டு மதியம் கறி சாப்பிடலாம்” என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி அவர் அந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். ஆனால், அங்குள்ள மருத்துவர் முதியவரின் வாயில் இருந்த 12 பற்களையும் மொத்தமாகப் பிடுங்கியுள்ளார். இத்தகைய அதிரடி மற்றும் அலட்சியமான சிகிச்சை முறை அந்த முதியவருக்குப் பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது.
இந்தச் சிகிச்சைக்குப் பெறப்பட்ட கட்டண விவகாரமும் பெரும் மோசடியாக அமைந்துள்ளது. முதியவரிடம் இருந்து 2.6 லட்சம் ரூபாய் பணத்தை அவரது கணக்கிலிருந்து எடுத்துக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம், அதுபோக இன்னும் 87,000 ரூபாய் பாக்கித் தொகை கேட்டுள்ளது. இறுதியில் வாய் முழுக்க ரத்தத்துடனும், கையில் வெறும் 420 ரூபாய் பணத்துடனும் லி வீடு திரும்பியுள்ளார். தனது தந்தையின் இந்த நிலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் அளித்த புகாரின் பேரில், தற்போது இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
