CRIME
“20 லட்சம் குடு, இல்லனா”.. காதலித்து கரம் பிடித்த காதலியை 72 நாட்களில் கொன்ற கணவன்… டெல்லியில் அரங்கேறிய பயங்கரம்..!!
டெல்லியின் பாலிகா குஞ்ச் பகுதியில் 8 ஆண்டுகால நட்பும் காதலும், திருமணம் முடிந்த வெறும் 72 நாட்களிலேயே ஒரு பெண்ணின் கொடூர மரணத்தில் முடிந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 28 வயதான ஆகிருதி என்ற பெண், 8 ஆண்டுகள் ஒருவரை காதலித்து வந்த நிலையில், இருவீட்டு பெற்றோரின் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மணமகன் வீட்டில் 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு ஆகிருதிக்குக் கடுமையான நெருக்குதல் கொடுத்துள்ளனர். வரதட்சணை தராததால், அவர் பெல்ட்டாலேயே கொடூரமாகத் தாக்கப்பட்டு, மனரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டு, இறுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளியான கணவரைக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த மரணம் குறித்து தடயவியல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். “8 ஆண்டுகால காதலும் நம்பிக்கையும் சில லட்ச ரூபாய்களுக்கு முன்னால் இவ்வளவு மலிவாகப் போய்விட்டதா? இன்றைய படித்த சமூகத்திலும் இந்த வரதட்சணை கொடுமை எப்போதுதான் முடிவுக்கு வரும்?” என்று சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
