CRIME
பகலில் நடுரோட்டில் நடந்த கொடூரம்!.. மனைவியை துடிதுடிக்க வெட்டிக்கொன்றுவிட்டு கணவன் செய்த காரியம்.. மேற்கு வங்கத்தில் மிரளவைத்த சம்பவம்..!!
மேற்கு வங்க மாநிலம் சோத்பூர் அருகே உள்ள மகேந்திரநகர் பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை கீதா தாஸ் என்ற பெண் அவரது கணவரால் பகல் நேரத்திலேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீதா தாஸ் சோத்பூர் ரயில் நிலையத்தை நோக்கி மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த கணவர் சுபாஷ் தாஸ், கூர்மையான ஆயுதத்தால் அவரைத் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கீதா தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
https://twitter.com/HateDetectors/status/2074829602103652488/video/1
மனைவியை வெட்டிய பிறகு, சுபாஷ் தாஸ் அதே ஆயுதத்தால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுபாஷை மீட்டு சிகிச்சைக்காக சாகர் தத்தா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தம்பதியினருக்கு இடையே இந்த கொடூரத் தாக்குதல் நடந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், இதுகுறித்து கர்டா (Khardah) காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
