LATEST NEWS
யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்.! தவெகவில் இணையும் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்..? அதிற்சியில் அலறும் அறிவாலயம்…!!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத், தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் அவர்கள் திமுகவில் இணைந்த போதிலும், அங்கு எதிர்பார்த்த முக்கியப் பொறுப்புகள் எதுவும் கிடைக்காததால் கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சியில் ஐக்கியமாக அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மூத்த அரசியல் தலைவரான ஓ.பன்னீர்செல்வம் தற்போதைய நிலையில் நேரடியாகக் கட்சி மாறத் தயக்கம் காட்டி வந்தாலும், தனது மகனின் இந்த அரசியல் நகர்வுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாகத் தெரிகிறது. தன் மகன் தரப்பு தவெக-வுக்குச் செல்வதற்கு அவர் ‘கிரீன் சிக்னல்’ கொடுத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் நடைபெறவுள்ள ஒரு முக்கிய விழாவில் ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவெக-வில் அதிகாரப்பூர்வமாக இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
