“அம்மா செத்தா அந்த வேலை எனக்கு!”.. 7 லட்சத்திற்கு கூலிப்படை ஏவிய கொடூரம்… மகள் செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா செத்தா அந்த வேலை எனக்கு!”.. 7 லட்சத்திற்கு கூலிப்படை ஏவிய கொடூரம்… மகள் செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்..!!

Published

on

ஜெய்ப்பூரில் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காகவும், அப்பாவின் மரணத்திற்குப் பின் தாய்க்குப் பரிதாப அடிப்படையில் கிடைத்த அரசு வேலையைப் பெறுவதற்காகவும், 23 வயது மகள் ஆயுஷி ஷர்மா தனது சொந்தத் தாயையே 7 லட்சம் ரூபாய் கூலிப்படை வைத்து காரால் மோதிக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 3 அன்று நீதிமன்ற கீழ்நிலை எழுத்தராகப் பணியாற்றி வந்த 45 வயதான நீரஜ் சர்மா, தனது மகனைப் பயிற்சி மையத்தில் விட்டுவிட்டுத் திரும்பும்போது, மணிக்கு 130 கி.மீ வேகத்தில் வந்த ஸ்கார்பியோ கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது சாலை விபத்தாகக் கருதப்பட்ட நிலையில், காவல்துறையினர் சம்பவ இடத்தின் CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது, இது திட்டமிட்ட படுகொலை என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தக் கொடூரச் சதித்திட்டத்தின் பின்னணியில் ஆயுஷி, அவரது மாமா மோகன் ஸ்வரூப் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர் பல்ராம் (என்ற ரவி) ஆகியோர் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தாயின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முதலில் ஒரு ‘தார்’ காரைப் பயன்படுத்திய இவர்கள், பின்னர் பரத்பூரைச் சேர்ந்த கூலிப்படையினரை ₹7 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்து இந்த ‘ஸ்கார்பியோ’ தாக்குதலை நடத்தியுள்ளனர். விபத்து நடந்தவுடன் குற்றவாளிகள் காரைக் கைவிட்டுவிட்டு பைக்கில் தப்பியோடியுள்ளனர். இந்த வழக்கில் மகள் ஆயுஷி ஷர்மா மற்றும் அவரது மாமா உட்பட 7 பேரை ஜெய்ப்பூர் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ள நிலையில், முக்கியச் சதிகாரனான உறவினர் பல்ராமைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தந்தையின் மறைவுக்குப் பின் தாய்க்கும் மகளுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே சொத்துத் தகராறு இருந்து வந்ததே இந்தக் கொலைக்கு முக்கியக் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in