DEVOTIONAL
சூரியன் தரும் மெகா ஜாக்பாட்!.. பூச நட்சத்திர சஞ்சாரத்தால் ‘பண மழையில்’ நனையப்போகும் 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கானு பாருங்க..!!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரிய பகவானின் ராசி மற்றும் நட்சத்திரப் பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், நடப்பு ஜூலை மாதத்தில் நிகழவிருக்கும் சூரியனின் நட்சத்திர மாற்றம் ஆன்மீக ரீதியிலும் ஜோதிட ரீதியிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை 20 ஆம் தேதி சூரிய பகவான் புதனின் ஆதிக்கம்பெற்ற பூச நட்சத்திரத்திற்குள் பிரவேசிக்கிறார். ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை அவர் இதே நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ள நிலையில், இந்த 15 நாட்களும் அனைத்து ராசிகளுக்கும் மாற்றங்களைத் தந்தாலும், குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்குப் பொற்காலமாக அமைந்து அளப்பரிய அதிர்ஷ்ட மழையைப்பொழிய வைக்கவுள்ளது.
மேஷ ராசி
பெரும் பலன்களைப் பெறுகின்றனர். இவர்களின் பொருளாதார நிலை கணிசமாக உயர்வதோடு, நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த மற்றும் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றிகரமாக முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியிடத்தில் புதிய பொறுப்புகளும், திறமைகளை வெளிப்படுத்திப் பாராட்டு பெறும் நல்வாய்ப்புகளும் தேடிவரும். முதலீடுகள் செய்வதற்கு உகந்த காலமாக அமைந்துள்ள இக்காலகட்டத்தில், குடும்பத்தினரின் முழு ஆதரவோடு நீண்டநாள் ஆரோக்கியப் பிரச்சினைகளும் தீர்ந்து நிம்மதி பெருகும்.
சிம்ம ராசி
இந்த பூச நட்சத்திரப் பெயர்ச்சி அபரிமிதமான யோகங்களை அள்ளித்தரவுள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பாதைகள் முதலீடுகளுடன் லாபகரமாகத் திறந்து, வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகளும், பணியில் இருப்பவர்களுக்குச் சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வும் கிடைக்கப் பிரகாசமான வாய்ப்புள்ளது. தம்பதியரிடையே அன்யோன்யமும் புரிதலும் கூடுவதோடு, குழந்தைகள் மூலம் பெருமை சேர்க்கும் சுபச் செய்திகள் வந்து சேரும்.
தனுசு ராசி
இந்த சூரியப் பெயர்ச்சி திருப்புமுனையாக அமையவுள்ளது. பல நாட்களாக வராத வராக்கடன்கள் மற்றும் பிறரிடம் கொடுத்து முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வந்து சேர்வதால் சேமிப்பு அதிகரிக்கும். சமுதாயத்திலும் உத்தியோகத்திலும் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய முதலீடுகள் மூலம் இரட்டிப்பு லாபம் காண்பீர்கள். நீண்ட உழைப்பிற்குப் பின் புதிய வேலை தேடுபவர்களுக்குப் பொருத்தமான வேலை அமையும். நீண்டநாள் கனவுகள் மற்றும் ஆசைகள் நிறைவேறி, குடும்பத்தில் மகிழ்ச்சியும் திருப்திகரமான உடல் ஆரோக்கியமும் நிலைத்திருக்கும்.
