தொட்டதெல்லாம் துலங்கப்போகுது!.. புதன் வக்ர நிவர்த்தியால் ஜூலை இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு ‘டபுள் ஜாக்பாட்’ அடிக்கப்போகுது.. உங்க ராசி இருக்கானு பாருங்க..!! – cinefeeds
Connect with us

DEVOTIONAL

தொட்டதெல்லாம் துலங்கப்போகுது!.. புதன் வக்ர நிவர்த்தியால் ஜூலை இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு ‘டபுள் ஜாக்பாட்’ அடிக்கப்போகுது.. உங்க ராசி இருக்கானு பாருங்க..!!

Published

on

ஜோதிடத்தில் அறிவு, பேச்சுத்திறன் மற்றும் வியாபாரத்தின் காரகராக விளங்கும் புதன் பகவான், தற்போது தனது சொந்த ராசியான மிதுனத்தில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். வரும் ஜூலை 24-ஆம் தேதி அவர் மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கத் தொடங்குகிறார். புதனின் இந்த நேர்கதி மாற்றமும், தற்போதைய சனியின் வக்ர நிலையும் இணைந்து சில ராசிகளுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியாக இரட்டிப்பு பலன்களையும் அசுர வளர்ச்சியையும் தரவுள்ளது.

மேஷ ராசி

Advertisement

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவோடு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும், வியாபாரத்தில் இரட்டிப்பு லாபமும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பள உயர்வுடன் புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.

மிதுன ராசி

Advertisement

முதல் வீட்டிலேயே புதன் நேர்கதி அடைவதால், குடும்பத்தில் மகிழ்ச்சியும், பணியிடத்தில் பாராட்டும் குவியும். தொழிலதிபர்களுக்கு லாபகரமான புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதுடன், குறிப்பாக ஐடி துறையில் உள்ளவர்களுக்கு இந்த காலம் பொற்காலமாக அமையும்.

விருச்சிக ராசி

Advertisement

எட்டாம் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாவதுடன், நீண்டகால மனஅழுத்தத்தை தந்த பிரச்சினைகளுக்கும், திருமண உறவில் இருந்த சிக்கல்களுக்கும் சுமுகமான தீர்வு கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இந்த ஜூலை இறுதிப் பகுதியில் மேஷம், மிதுனம், விருச்சிகம் ஆகிய மூன்று ராசிகளுக்கும் டபுள் ஜாக்பாட் யோகம் அடிப்பது உறுதியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in