DEVOTIONAL
அப்படிப்போடு..! அதிர்ஷ்ட கதவு திறந்தது.. இனி தொட்டதெல்லாம் வெற்றி தான்.. ராகு – செவ்வாய் உருவாக்கிய நவபஞ்சம ராஜயோகம்.. இந்த 3 ராசிகளுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.. உங்க ராசி இருக்கா..?
ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில், கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் ஆகஸ்ட் 02-ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்து, ராகுவுடன் இணைந்ததன் மூலம் சக்திவாய்ந்த ‘நவபஞ்சம ராஜயோகத்தை’ உருவாக்கியுள்ளார். இந்த அரிய கிரகக் கூட்டணி செப்டம்பர் 18, 2026 வரை நீடிக்க உள்ள நிலையில், குறிப்பிட்ட சில ராசியினருக்கு தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் யோகங்களை அள்ளித்தரவுள்ளது.
மேஷ ராசி
இந்த யோகம் மிகவும் சாதகமாக அமையும். தன்னம்பிக்கை அதிகரித்துத் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். முதலீடுகள் மற்றும் பங்குச் சந்தை மூலம் நீண்டகாலமாக எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதுடன், புதிய வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை அமையும். மேலும் வியாபாரிகளுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைத்து நிதி நிலைமை கணிசமாக உயரும்.
மிதுன ராசி
புதிய உற்சாகமும் தெளிவான முடிவெடுக்கும் திறனும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கும் வேலை மாற்றம் செய்வதற்கும் இது ஏற்ற காலமாகும். குடும்பத்தில் சகோதர வழியில் பிணைப்பு வலுப்படுவதோடு, வீடு மற்றும் நிலம் போன்ற சொத்துகளை வாங்கும் வாய்ப்புகளும் கைகூடி வரும்.
துலாம் ராசி
இந்த ராஜயோகம் வேலை மற்றும் வியாபாரத்தில் புதிய கதவுகளைத் திறந்துவிடும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள், பதவி உயர்வு மற்றும் எதிர்பாராத பண வரவு கிடைத்து நீண்டநாட்களாக இருந்த நிதி நெருக்கடிகள் விலகும். தாமதமான முக்கிய காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைவதுடன், காதல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகி வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
