DEVOTIONAL
“அடடா.. ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?!.. ஜூலை 27 முதல் தேடி வரப்போகும் கோடீஸ்வர யோகம்.. நீங்க கொடுத்து வச்சவங்க”..!!!
ஜோதிடத்தில் நீதியின் தேவனாகக் கருதப்படும் சனி பகவானின் பெயர்ச்சி எப்போதுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. அந்த வகையில், தற்போது மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவான், வரும் ஜூலை 27 முதல் டிசம்பர் 11 வரை வக்ர நிலையில் சஞ்சரிக்க உள்ளார். சனியின் வக்ரக் காலத்தில் அவரது கெடுபலன்களின் தாக்கம் குறைந்து, சுப பலன்கள் அதிகரிக்கும் என்பது ஜோதிட விதி. இந்த வக்ரப் பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சனி அமர்வதும், அதனுடன் குருவின் பார்வையும் சேர்வதும் பெரும் நன்மைகளைத் தரவுள்ளது. குறிப்பாக, குடும்பத்தில் நீடித்து வந்த சச்சரவுகள் அகலும். தம்பதியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்து, பிரிந்திருந்த கணவன்-மனைவி மீண்டும் இணையக்கூடிய சுப சூழ்நிலை உருவாகும்.
பொருளாதார ரீதியாக ரிஷப ராசியினருக்கு இது ஒரு பொற்காலமாகவே அமையப் போகிறது. புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைப்பதுடன், நிலம் அல்லது சொத்துக்கள் வாங்கும் யோகமும் கை கூடிவரும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, மாணவர்களுக்கு விரும்பிய கல்லூரிகளில் உயர்கல்வி வாய்ப்பும் வெளிநாட்டு யோகமும் அமையும். மேலும், அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு நல்ல வெற்றியும், ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் நிச்சயம் கிடைக்கும். சுருக்கமாகக் கூறின், இந்தச் சனி வக்கிரப் பெயர்ச்சி ரிஷப ராசியினரின் வாழ்க்கைத் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் மிகச் சிறந்த நன்மைகளைத் தரவுள்ளது.
