DEVOTIONAL
“6,150 டன் குப்பையும் இனி வேஸ்ட் இல்லை!”.. களத்தில் இறங்கிய முதல்வர் விஜய் போட்ட அதிரடி ‘ஆர்டர்’.. அதிகாரிகளுக்கு வைக்கப்பட்ட ‘டெட்லைன்..!!
தமிழக அரசுத் துறைகளின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக இயங்குவதை உறுதிசெய்ய, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை மையங்களுக்கு நேரில் சென்று எதிர்பாராத ஆய்வுகளை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சென்னை சைதாப்பேட்டையிலுள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதிக்குச் சென்று பார்வையிட்ட அவர், அடுத்தகட்டமாக சேத்துப்பட்டில் அரசு மற்றும் தனியார் கூட்டாண்மையில் இயங்கும் உயிரி எரிவாயு தயாரிப்பு நிலையத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்டார். நகரத்தில் சேகரமாகும் உணவுக் கழிவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகளைக் கொண்டு அறிவியல் முறையில் எரிவாயு தயாரிக்கும் முறையையும், அங்கு நடைபெறும் கழிவு மேலாண்மைப் பணிகளையும் முதல்வர் மிக நெருக்கமாகக் கண்காணித்து அதிகாரிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, சென்னை மாநகரில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 6,150 மெட்ரிக் டன் குப்பைகளையும் முறையாகத் தரம் பிரிக்க அறிவுறுத்தப்பட்டது. அதில் மக்கும் கழிவுகளை உயிரி எரிவாயுவாக மாற்றவும், மக்காத கழிவுகளைத் தார்ச்சாலைகள் அமைப்பதற்கும் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கும் வழங்கிப் பயன்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நகர்ப்புறங்களில் தீவிரமாகச் செயல்படுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது.
