DEVOTIONAL
அட என்னப்பா இது…! எண்ணெய் ஊத்துனா பாலா மாறுது… சிவலிங்கம் செய்த ‘மேஜிக்’… வாயடைத்துப்போன பக்தர்கள்..! ஆந்திராவில் நடப்பது என்ன..?!
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சின்ன வெங்கடாம் பள்ளியில் உள்ள சிவன் கோவிலில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இக்கோவிலில் நேற்று பூசாரி ஒருவர் சிவலிங்கத்திற்கு எண்ணெய் அபிஷேகம் செய்துள்ளார். அப்போது சிவலிங்கத்தின் மீது ஊற்றப்பட்ட எண்ணெய், பால் போல் மாறி வழிந்தோடியதாகக் கூறப்படுகிறது.
இந்த செய்தி சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுத்தீ போல பரவியதையடுத்து, திரளான பக்தர்கள் கோவிலில் கூடினர். எண்ணெய் பால் போல் வழிந்த காட்சியை நேரில் கண்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் ஆச்சரியமும் பரவசமும் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியதுடன், பக்தர்கள் பலர் இதனை ஒரு தெய்வீக அதிசயமாகக் கருதி வழிபட்டனர்.
இருப்பினும், இந்நிகழ்வுக்கான காரணம் குறித்து அரசு தரப்பிலோ அல்லது அறிவியல் பூர்வமாகவோ இதுவரை எந்தவித உறுதியான தகவலும் விளக்கமும் வெளியாகவில்லை. இதுகுறித்து மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில், இச்சம்பவத்தின் உண்மை நிலையை அறிந்துகொள்ள முறையான ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
