LATEST NEWS
12 முறை ‘NO’ சொன்ன கூகுள்… 13-வது முறை நடந்த அதிசயம்.. கூகுள் நிறுவனத்தையே திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்.. இணையத்தில் வைரலாகும் போஸ்ட்..!!
ஒரு வேலையில் சில முறை நிராகரிக்கப்பட்டாலே பலர் மனமுடைந்து போகும் நிலையில், டெல்லியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் சௌம்யதீப் பால் தொடர் நிராகரிப்புகளைச் சந்தித்து கூகுள் நிறுவனத்தில் சாதித்துக் காட்டியுள்ளார். கூகுளிடமிருந்து 12 முறை நிராகரிப்புகளைச் சந்தித்த பிறகு, 13-வது முயற்சியில் அவருக்கு அந்த மாபெரும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. கூகுள் மட்டுமின்றி, மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து 16 முறையும், அமேசான் நிறுவனத்திடமிருந்து 3 முறையும் அவர் நிராகரிப்புகளை எதிர்கொண்டுள்ளார். இருப்பினும், இந்தத் தோல்விகளால் சோர்ந்துபோகாமல் தனது உத்திகளை மாற்றியமைத்து விடாமுயற்சியுடன் செயல்பட்டதே தனது வெற்றிக்குக் காரணம் என்று அவர் தனது X தளப் பதிவில் பகிர்ந்துள்ளார்.
I got into Google after getting rejected 12 times. 13th time was the charm🧿
Now just Google,
Amazon – got the offer after 3 rejections
Microsoft – got the offer after 16 rejections
Apple – never got a call back
Oracle – never got a call back
Applying in these companies is… pic.twitter.com/gjHMdfzdEA— Soumyadeep Paul (@investwithpaul) July 19, 2026
வேலை தேடும் இளைஞர்களுக்குப் பயனுள்ள 3 முக்கிய ஆலோசனைகளையும் சௌம்யதீப் வழங்கியுள்ளார். முதலாவதாக, கண்மூடித்தனமாக அனைத்து வேலைகளுக்கும் விண்ணப்பிப்பதைத் தவிர்த்து, சுயவிவரக் குறிப்பிற்கும் வேலைத் தேவைகளுக்கும் பொருத்தம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். இரண்டாவதாக, நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் மூலம் மனிதவளத் துறையின் (HR) நேரடி மின்னஞ்சல் முகவரியைப் பெற்று, விண்ணப்ப அடையாள எண்ணுடன் நேரடியாக மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். மூன்றாவதாக, நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு மேலாளர்களுக்கு லிங்க்ட்இன் (LinkedIn) தளம் மூலமாக நேரடியாகச் செய்திகளை அனுப்பி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சௌம்யதீப்பின் இந்த ஊக்கமளிக்கும் பயணம் இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவரது விடாமுயற்சியைப் பலரும் பாராட்டிய போதிலும், சிலர் மாற்றுக்கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர். புதியவர்களுக்குப் முன்னணி கல்லூரிகளின் முத்திரையும், அனுபவஸ்தர்களுக்குப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் பெயர்களுமே வேலைவாய்ப்பைத் தீர்மானிப்பதாக ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனத்தில் 16 முறை நிராகரிக்கப்படுவது தயார் செய்யும் உத்தியில் உள்ள குறைபாட்டையே காட்டுகிறது எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
