CRIME
“நிஜமா காதலிச்சா… செத்துக்காட்டு..!” காதலிகளின் பேச்சால் உயிரை மாய்த்துக் கொண்ட 2 இளைஞர்கள்…! கான்பூரில் பெரும் அதிர்ச்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு வேறு சம்பவங்களில் இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் சம்பவம், கான்பூரின் சாகேத் நகரில் நடந்துள்ளது. அங்கு வசித்து வந்த 35 வயதான சுபோத் யாதவ் என்ற இளைஞர், தான் காதலித்து வந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏதோ ஒரு விஷயத்தில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது அந்தப் பெண், சுபோத்திடம் “உண்மையாகவே என்னை காதலிக்கிறாய் என்றால், முதலில் செத்துக்காட்டு” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுபோத், அன்றைய இரவில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இரண்டாவது சம்பவம், சென் பச்சிம் பாரா பகுதியில் உள்ள குஞ்ச் விஹார் பகுதியில் நடந்துள்ளது. அங்கு வசித்து வந்த 22 வயதான சோமு என்ற இளைஞர், வீட்டில் குடும்பத்தினர் யாரும் இல்லாத நேரத்தில், தனியாக இருந்தபோது தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சோமுவின் குடும்பத்தினர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சோமுவின் கைபேசியைப் பரிசோதித்த போது, அவர் இறப்பதற்குச் சற்று முன்பு வரை தனது காதலியிடம் பேசியிருப்பது தெரியவந்தது.
இந்த இரண்டு சம்பவங்களிலும் கான்பூர் காவல் துறையினர் இளைஞர்களின் கைபேசிகளைக் கைப்பற்றியுள்ளனர். அவர்களின் வாட்ஸ்அப் உரையாடல்கள், குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புப் பதிவுகளின் அடிப்படையில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
